வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

அரசு அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தேனியில் நடந்தது.;

Update:2022-01-25 20:34 IST
தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு பரிசுகளையும், வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். 

விழாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில், போலீஸ் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அரசின் பல்வேறு அலுவலகங்களிலும் இதுபோல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்