பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு
பொள்ளாச்சி, டாப்சிலிப் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி, டாப்சிலிப் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஜோதி, பள்ளி ஆசிரியர்கள் தேவி, உஷா மற்றும் இளம் வாக்காளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இதேபோன்று டாப்சிலிப் வனச்சரக அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
இலவச உதவி எண்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றும் பொறுப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் தங்களது சந்தேகங்களை 1950 என்னும் இலவச வாக்காளர் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டு நிவர்த்தி பெறலாம். வாக்காளர் உதவி மைய செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.