ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.;

Update:2022-01-25 22:35 IST
பொள்ளாச்சி

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. .

கொப்பரை தேங்காய் ஏலம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் ஏலத்திற்கு கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு சற்று உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

வரத்து குறைந்தது

ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு 82 விவசாயிகள் 429 மூட்டை கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். ஏலத்தில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.

 அதன்படி 220 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.89.60 முதல் ரூ.91.99 வரையும், 209 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.73.50 முதல் ரூ.86  வரையும்  ஏலம்  போனது.

கடந்த வாரத்தை விட 118 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது. இதற்கிடையில் வரத்து குறைந்தும் கிலோவுக்கு 65 மட்டும் விலை உயர்ந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கொள்முதல் மையம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் நெகமம், செஞ்சேரிமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 இதைப்போன்று பொள்ளாச்சி, ஆனைமலையில் கொப்பரை கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்