வீடு விற்பதாக ரூ.14 லட்சம் மோசடி

வீடு விற்பதாக ரூ.14 லட்சம் மோசடி;

Update:2022-01-25 22:43 IST
வீடு விற்பதாக ரூ.14 லட்சம் மோசடி
கோவை

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த ஹபிபுல்லா என்பவருடைய மனைவி ஹாஜிரா (வயது36). இவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை வெள்ளலூர் மாரப்பகவுண்டர் தெருவை சேர்ந்தவர் மாலதி. இவரது வீடு விற்பனைக்கு உள்ளதாக அறிந்து அணுகிய போது வீட்டின் விலை ரூ.48 லட்சம் என்று கூறினார். அதற்கு ஒப்புக் கொண்டு வீட்டை வாங்க முதல்கட்டமாக ரூ.24 லட்சத்தை முன்பண மாக செலுத்தி ஒப்பந்தம் போட்டேன்.

 இருவரது ஒப்புதலின் படி வீட்டு பத்திரத்தை திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.38 லட்சம் கடன் பெறப்பட்டது. அந்த முழு தொகையை யும் வங்கி வரைவோலையாக மாலதியிடம் கொடுத்தேன். அப்போது நான் ஏற்கனவே செலுத்திய முன்பணம் போக எனக்கு தர வேண்டிய ரூ.14 லட்சத்தை என்னிடம் திருப்பி கொடுத்து விடுவதாக மாலதி உறுதி அளித்தார்.

 இதற்காக ரூ.14 லட்சத்துக்கு 2 தவணைகளாக காசோலை கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. எனவே மோசடி செய்த மாலதி மீது நடவடிக்கை எடுத்து   பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மாலதி மீது மோசடி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்