கிராமங்களில் முழுமையாக செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு கல்வித்துறை அழைப்பு

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கிராமங்களில் முழுமையாக செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.;

Update:2022-01-25 22:44 IST
பொள்ளாச்சி

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கிராமங்களில் முழுமையாக செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.

இல்லம் தேடி கல்வி

கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் சரிவர செயல்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகளுக்கு கற்றல் குறைபாட்டை போக்குவதற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் அங்கு உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி குறித்து பாடம் நடத்தப்பட்டது. குழந்தைகளும் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டனர். 

இதற்கிடையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு போதிய தன்னார்வலர்கள் நியமிக்கப்படாததால், இந்த திட்டத்தை கிராமப்புறங்களில் முழுமையாக செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

விருப்பமுள்ள தன்னார்வலர்கள்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாலை நேரத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து அடிப் படை கல்வி அறிவு சொல்லி கொடுக்கப்படும். 12-ம் வகுப்பு படித்தவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

நகர்புறங்களில் எளிதில் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் 80 சதவீதம் மட்டுமே தன்னார்வலர் கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் சில பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டம் கிராமங்களில் முழுமையாக செயல்படுத்த விருப்ப முள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்