குளித்தலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குளித்தலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

Update: 2022-01-25 19:18 GMT
குளித்தலை
குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி கடந்த மாதம் 6-ந் தேதி குளித்தலை நகரப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சாலை மற்றும் தெருக்கள் ஓரம் கடைகளின் உரிமையாளர்கள் பொதுஇடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை கண்டறிந்தார். அந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் நகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.மேலும் அகற்றப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அதற்கான செலவின தொகை அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரிவிதிப்பில் சேர்த்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நகராட்சி ஆணையர் சுப்புராம் மற்றும் அதிகாரிகள்  குளித்தலை நகரப் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்