நெல்லை டவுனில் முதியவரின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடியவர் கைது

முதியவரின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-01-25 21:25 GMT
நெல்லை:
நெல்லை டவுனில் முதியவரின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பணம் திருட்டு
நெல்லை டவுன் ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் ஜபார் உல்லா கான் (வயது 74). இவரது மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜபார் உல்லா கானின் வங்கி கணக்கில் இருந்து கடந்த சில நாட்களாக மொத்தம் ரூ.1¼ லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது மகளின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. உடனே இதுகுறித்து அவர், தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தான் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.
கைது
அதில் ஜபார் உல்லா கானை கவனித்துக் கொள்வதற்காக திசையன்விளை அருகே உள்ள புத்தன்தருவை பகுதியை சேர்ந்த முருகன் (44) என்பவரை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வைத்துள்ளனர்.
இந்த நிலையில் முருகன், ஜபார் உல்லா கானின் ஏ.டி.எம். கார்டை எடுத்து, கடந்த சில நாட்களாக சிறிது சிறிதாக ரூ.1¼ லட்சம் வரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முருகனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்