ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-26 00:40 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம், சித்தாலபாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் குமார் தலைமையில் பெரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது பெரும்பாக்கம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த கைப்பையில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

கார் டிரைவர் கைது

விசாரணையில் அவர் கார் டிரைவரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37), என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னை, புறநகர் பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்