ஜோலார்பேட்டை அருகே நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றினார்

ஜோலார்பேட்டை அருகே நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியேற்றி வைத்து, ரூ.1¼ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-01-26 19:01 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியேற்றி வைத்து, ரூ.1¼ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலெக்டர் கொடியேற்றினார்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

நலத்திட்ட உதவி

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 21 பேருக்கு முதல்வர் விருது மற்றும் 15 போலீசாருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளின் சார்பில் 395 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கமோண்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

விழாவில் திருப்பத்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முனிராஜ், காவல் துறை, சுகாதாரத் துறை, ஊராக வளர்ச்சித் துறை, தீயணைப்புத் துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்