தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாதை

குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாைத செலுத்தினார்.

Update: 2022-01-26 19:23 GMT
விருதுநகர், 
குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாைத செலுத்தினார். 
குடியரசு தின விழா 
விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 
பின்னர் அவர்  77 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக சான்றிதழ்களையும், 140 போலீசாருக்கு முதல்-அமைச்சரின் பதக்கங்களையும் வழங்கினார். மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு வருடாந்திர பராமரிப்பு தொகையாக தலா ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலைகளையும் வழங்கினார்.
கொடிநாள் வசூலில் அதிக தொகை வசூல் செய்ததற்காக அரசு அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் மேகநாத ரெட்டியை மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு மனோகர்,  திட்ட இயக்குனர் திலகவதி ஆகியோர் வரவேற்றனர்.
நீதிமன்ற வளாகம் 
விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட்  மருதுபாண்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
 இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி சதீஷ், உரிமையியல் நீதிபதி சிந்துமதி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 
 விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்திமான் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணிலும் தேசிய கொடியேற்றி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்