ரேஷன் கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.;

Update:2022-01-27 21:46 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் ரேஷன் கடைகளில் கொேரானா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றுவதில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அபராதம் விதிக்க வேண்டும்

பொள்ளாச்சி தாலுகாவில் 168 ரேஷன் கடைகளும், ஆனைமலை தாலுகாவில் 103 ரேஷன் கடைகளும் உள்ளன. தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் முடிந்து, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனால் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவு வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று பொருட்கள் வாங்காமல் நெருக்கமாக நிற்கின்றனர். மேலும் முககவசம் பெரும்பாலானோர் அணிவதில்லை.

தற்போது நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் குறைவான அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கைரேகை பதிவு செய்த பிறகே பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. 

ஆனால் கைரேகை வைக்கும் முன் கைகளை சுத்தப்படுத்த பொதுமக்களுக்கு கிருமி நாசினி மருந்து வழங்கப்படுவதில்லை இதன் மூலம் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை.

கொரோ னா பாதுகாப்பு வழிமுறைகளை மீறும வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்று ரேஷன் கடைகளுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்