பெண் என்ஜினீயரின் வயலில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு

பெண் என்ஜினீயரின் வயலில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-01-27 17:30 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தை சேர்ந்த என்ஜினீயர் சிவரஞ்சனி. இவருடைய கணவர் சரவணகுமார். இவர் சித்த மருத்துவர். கணவன், மனைவியும் சேர்ந்து இந்தியாவில் உள்ள 1,250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளனர். சிவரஞ்சனி சாகுபடி செய்துள்ள வயலை நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் அமுதாதேவி, கலைச்செல்வன், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாகுபடி செய்துள்ள நெல் ரகங்கள் குறித்தும், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாரம்பரியமிக்க நெல் ரகங்களின் விளைச்சல் குறித்தும் சிவரஞ்சினியிடம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ் கூறுகையில், பாரம்பரியமிக்க நெல் பயிர் சாகுபடி குறித்து நேரடியாக ஆய்வு செய்தோம் தமிழகத்தில் உள்ள 37 விதை பண்ணைகளுக்கு சிவரஞ்சனி சாகுபடி செய்த வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் விதைகளை வாங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து கொள்முதல் செய்ய உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்