நகை-பணம் திருட்டு

பாலையூர் அய்யனார் கோவிலில் நகை மற்றும் பணம் திருட்டு ேபானது குறித்து ேபாலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-01-27 19:03 GMT
குத்தாலம்:
பாலையூர் அய்யனார் கோவிலில் நகை மற்றும் பணம் திருட்டு ேபானது குறித்து ேபாலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை-பணம் திருட்டு
குத்தாலம் அருகே பாலையூர் ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பேராவூர் பகுதியில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் கடந்த 25-ந் தேதி இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலையூர் போலீசில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் கோவிலில் அய்யனார் சிலை அருகே பூர்ணா மற்றும் புஸ்கலா அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த 1½ கிராம் நகை, மேலும் பித்தளை அண்டா, மணி, உண்டியலை உடைத்து ரூ.1000-ம் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது  தெரியவந்தது. 
இந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்