வால்பாறையில் தேர்தல் பாதுகாப்பு பணி ஆலோசனை

வால்பாறையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.;

Update:2022-01-28 21:06 IST
வால்பாறை

வால்பாறையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

வருகிற 19-ந்தேதி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டு பகுதிகளுக்கான தேர்தல் ஆயத்த பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் அலுவலகம் நேற்று முதல் தயார் நிலையில் உள்ளது. 
வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டில் 6,7,8,13,16,18,20 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கான வார்டுகள் ஆகும். 3,11,12,15,17,19 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பொது வார்டுகளாகும். 2,5,14,21 ஆகிய வார்டுகள் பொதுவான மகளிருக்கான வார்டுகளாகும். 1,4,9,10 ஆகிய வார்டுகள் யாருக்கும் ஒதுக்கப்படாத பொது வார்டுகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது வார்டுகளுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.2000 கட்டணமாகவும், ஆதிதிராவிடர் வார்டுகளில் போட்டியிடுபவர்கள் ரூ.1000 கட்டணமாகவும் கட்டவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பணிகள்

இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய தேர்தல் பணியாளர்களுக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சியளிப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கியது. வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் ஆகியோர் நகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணிகள், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வரக்கூடியவர்களுக்கான வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். வால்பாறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஆனால் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்