கடலூர் மாவட்டத்தில் 1640 கோவில்கள் திறப்பு

தடை நீக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1640 கோவில்களில் நேற்று திறக்கப்பட்டன.பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2022-01-28 16:40 GMT
கடலூர், 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த தடையையும் அரசு நீக்கி, எல்லா நாட்களிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப் பட்டு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

கோவில்கள் திறப்பு

அதாவது கடலூர் பாடலீஸ்வரர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், சிதம்பரம் தில்லைக்காளி கோவில், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1640 கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டத்தை காணமுடிந்தது. 

மேலும் செய்திகள்