புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
அருப்புக்கோட்டை புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்று கொண்டார்.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த அசோக்குமார் தேவகோட்டைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உசிலம்பட்டியில் பணியாற்றிய ஆணையர் பாஸ்கரன் அருப்புக்கோட்டை நகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம்பிரித்து மறுசுழற்சி செய்யவும், சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதியில் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.