கொரோனாவுக்கு மேலும் 50 பேர் பலி; கர்நாடகத்தில் ஒரேநாளில் 71 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
கர்நாடகத்தில் ஒரேநாளில் 71 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 50 பேர் பலியாகி உள்ளனர்.;
பெங்களூரு: கர்நாடகத்தில் ஒரேநாளில் 71 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 50 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில அரசின் சுகாதாரத்துறை, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீண்டவர்களின் எண்ணிக்கை
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 174 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 31 ஆயிரத்து 198 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 694 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 50 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 71,092 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 96 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்து 767 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 20.91 ஆக உள்ளது.
50 பேர் உயிரிழந்தனர்
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பாகல்கோட்டையில் 187 பேர், பல்லாரியில் 709 பேர், பெலகாவியில் 725 பேர், பெங்களூரு புறநகரில் 558 பேர், பெங்களூரு நகரில் 15,199 பேர், பீதரில் 194 பேர், சாம்ராஜ்நகரில் 618 பேர், சிக்பள்ளாப்பூரில் 427 பேர், சிக்கமகளூருவில் 283 பேர், சித்ரதுர்காவில் 192 பேர், தட்சிண கன்னடாவில் 516 பேர், தாவணகெரேயில் 186 பேர், தார்வாரில் 1,500 பேர், கதக்கில் 171 பேர், ஹாசனில் 1,037 பேர், ஹாவேரியில் 179 பேர், கலபுரகியில் 406 பேர், குடகில் 371 பேர், கோலாரில் 452 பேர், கொப்பலில் 227 பேர், மண்டியாவில் 963 பேர், மைசூருவில் 1,877 பேர், ராய்ச்சூரில் 225 பேர், ராமநகரில் 262 பேர், சிவமொக்காவில் 509 பேர், துமகூருவில் 1,315 பேர், உடுப்பியில் 818 பேர், உத்தரகன்னடாவில் 760 பேர், விஜயாப்புராவில் 125 பேர், யாதகிரியில் 207 பேர் உள்ளனர்.
கர்நாடகத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 8 பேரும், ஹாசனில் 5 பேரும், பெலகாவியில் 3 பேரும், துமகூரு, தட்சிண கன்னடாவில் தலா 4 பேரும், மைசூருவில் 8 பேரும் உள்பட 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.