நெல்லை:
கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் பருத்திகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பருத்திகுளம் அருகே உள்ள சிற்றாறில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பருத்திகுளத்தை சேர்ந்த முருகன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.