வா சந்திராபுரம், வதம்பச்சேரியில் சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
வா சந்திராபுரம், வதம்பச்சேரியில் சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது 240 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வதம்பச்சேரி மற்றும் வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கொரோனாவிற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நோயாளிகள் பலர் நேரிடையாக வந்து பெற்று செல்கின்றனர். இந்தநிலையில், சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகள், பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நலன் கருதி தினமும் 3 நேரம் சுகாதார நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்க கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தினமும் காலை 6 மணி, மதியம் 2 மணி, இரவு 8 மணி என மூன்று நேரமும் சந்திராபுரம் மற்றும் வதம்பச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.