கோவையில் மேலும் 3,309 பேருக்கு கொரோனா
கோவையில் மேலும் 3,309 பேருக்கு கொரோனா;
கோவை
கோவை மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோரும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அதுவே நேற்றும் குறைந்து ஒரே நாளில் மேலும் 3,309 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 338 ஆக அதிகரித்தது.
மேலும் நேற்று 3,684 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 2 லட்சத்து 79 ஆயிரத்து 689 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 79 வயது மூதாட்டி, 85 வயது முதியவர், 74 வயது முதியவர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 59 வயது ஆண், 73 வயது முதியவர் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதன்படி மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,563 ஆக உயர்ந்தது. தற்போது 27,086 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
-