கனிமவள நிர்வாக இயக்குனர் ஆய்வு
சிவகங்கை கிராபைட் ஆலையில் ஆய்வு செய்து உற்பத்தித்திறனை அதிகரிக்க நிர்வாக இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
சிவகங்கை,
சிவகங்கை கிராபைட் ஆலையில் ஆய்வு செய்து உற்பத்தித்திறனை அதிகரிக்க நிர்வாக இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆய்வு
சிவகங்கையை அடுத்த கோமாளிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலையில் கனிம வளத்துறை நிர்வாக இயக்குனர் சுவித்ஜெயின், ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கனிம நிறுவன கிராபைட் ஆலையில் கனிமக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதையும், கிராபைட் பொடியாக தயாரிக்கப்பட்டு வருவதையும் மற்றும் கனிமப் பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு வரும் பணியையும் பார்வையிட்டார்.
கட்டமைப்பு வசதி
பின்னர் அவர் ஆலையில் உற்பத்தித் திறனை கூடுதலாக அதிகரிக்க வேண்டும். திட்டப்பணிகளை விரிவுபடுத்து வதற்கும், ஆலையின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் அரசிற்கு அறிக்கை அனுப்பும்படி அலுவலர்களிடம் தெரிவித்தார்.
அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் கிராபைட் நிறுவன, உதவி பொது மேலாளர்கள் ஹென்றி ராபர்ட் சந்தானம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.