திருக்காட்டுப்பள்ளி அரசு பள்ளி மாணவிக்கு சென்னை பல் மருத்துவக்கல்லூரியில் இடம்

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவப்படிப்பு படிக்க திருக்காட்டுப்பள்ளி அரசு பள்ளி மாணவிக்கு சென்னை பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

Update: 2022-01-29 20:16 GMT
திருக்காட்டுப்பள்ளி:
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவப்படிப்பு படிக்க
திருக்காட்டுப்பள்ளி அரசு பள்ளி மாணவிக்கு சென்னை பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 
நீட் தேர்வில் வெற்றி 
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி அகிலா. இவர்களது மகள் ஆர்த்தி. இவர் மனையேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். ஆர்த்தி முதல் முறையாக நீட் தேர்வை எழுதினார். தேர்வில் 214 மதிப்பெண் பெற்று  7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சென்னை வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் ே்சருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளார். 
அனைவருக்கும் நன்றி 
இதுகுறித்து மாணவி ஆர்த்தி கூறுகையில், நான் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக  பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படு்த்தினர். இதனால் நான் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீட்தேர்வில் வெற்றி பெற்று பல் மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவி ஆர்த்தியை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 

மேலும் செய்திகள்