மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ‘செம்மொழிச் சாலை’ பெயர் பலகை திறப்பு

மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ‘செம்மொழிச் சாலை’ பெயர் பலகை திறப்பு விழாவில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.

Update: 2022-01-30 09:14 GMT
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் நடந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலைக்கு ‘செம்மொழிச் சாலை’ என பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து மேடவாக்கம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலைக்கு ‘செம்மொழிச் சாலை’ என பெயர் பலகை வைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சிவபூஷணம் ரவி தலைமையில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் ‘செம்மொழிச் சாலை’ பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் ரவி, ஒன்றிய தலைவர் சங்கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்