அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.;

Update:2022-01-30 19:01 IST
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் மகா சனிப்பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் உள்ள மகா நந்திக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து உமையாட்சீஸ்வர் கோவில் தியான நந்திக்கும், ஆட்சீஸ்வரர் எதிரில் உள்ள நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பிரதோஷ நாயகர், நாயகி, உற்சவர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருளினார். 

ஏராளமான பொதுமக்கள் கொரோனா விதிகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் ஆர்.சங்கர் சிவாச்சாரியார், அச்சரப்பாக்கம் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்