ஆனைமலை
ஆனைமலையை அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது43). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் இவரது கடைக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு, 20 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.