காட்டுமன்னாா்கோவில் அருகே ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு

காட்டுமன்னாா்கோவில் அருகே ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2022-01-30 16:00 GMT
கடலூர், 

காட்டுமன்னார்கோவில் அருகே கொத்தவாசல் பெரியதெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் வினோத்குமார் (வயது 37). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மீன்சுருட்டியை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி அமலி ஜாஸ்மின் ஆகிய 2 பேரும் தனக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆகவே எனது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். 

புகார் மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இது பற்றி புத்தூர் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசாா் நடத்திய விசாரணையில் அவர்கள், மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ், அமலி ஜாஸ்மின் ஆகியோர் மீது புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்