பென்னாகரம் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற காளை இறந்தது கிராமமக்கள் அஞ்சலி

பென்னாகரம் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற காளை இறந்ததால் கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2022-01-30 16:16 GMT
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டி, செங்கனூர் உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில் ஊர்பொதுமக்கள் சார்பில் சாமி எருதாட்ட காளை கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்த காளை ஆண்டுதோறும் 7 கிராமம் சார்பில் நடைபெறும் எருது விடும் விழாவில் பங்கேற்று வந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் இந்த காளை எருது விடும் விழாவில் பங்கேற்று தனது வீரத்தை காட்டி வந்துள்ளது.
இந்த நிலையில் எருதாட்ட காளை நேற்று திடீரென இறந்தது. இதனால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையொட்டி கிராமமக்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்குகள், சிறப்பு பூஜைகள் செய்து காளையை கிராமமக்கள் அடக்கம் செய்தனர். 7 கிராமத்திற்கு சொந்தமான பொது எருதாட்ட காளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்