பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2022-01-30 16:19 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

பேரூராட்சி, நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
நீடாமங்கலத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 30 பேர் விண்ணப்ப மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

இந்த நிலையில் நீடாமங்கலம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம், பரிசு பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதேநேரத்தில் அரசியல் கட்சியினர் வார்டுவாரியாக போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்