கிணற்றில் மூதாட்டி பிணம்

திண்டுக்கல் அருகே கிணற்றில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.;

Update:2022-01-30 22:45 IST
திண்டுக்கல் : 

திண்டுக்கல் அருகேயுள்ள ராஜாக்காபட்டியை அடுத்த பண்ணைபட்டியை சேர்ந்தவர் மின்னல்கொடி (வயது 62). நேற்று முன்தினம் காலை இவர் ஆடு மேய்க்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். 

அப்போது பண்ணைப்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் அவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது.  இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து மின்னல்கொடி உடலை மீட்டனர். மேலும் இதுபற்றி சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்