மானாமதுரை,
மானாமதுரை அருகே மேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது80). இவருக்கு குழந்தைகள் இல்லை. ஆறுமுகத்தின் 2-வது மனைவி நல்லமாள். மகன் கலைச்செல்வன் (36). இவர் தனது தாய், மனைவி குழந்தைகளுடன் மதுரை மாவட்டம் இளமனூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில், இளமனூரில் இருந்து குடி போதையில் ஆட்டோவில் மேல்குடி கிராமத்திற்கு பெரியம்மா பிச்சையமாள் வீட்டிற்கு கலைச்செல்வன் வந்துள் ளார். அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது வந்த பிச்சை யம்மாள் கலைச்செல்வனின் கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.