கிளாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

கிளாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2022-01-31 16:24 IST
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 38). இவர் நேற்று முன்தினம் கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையை கடக்க முயன்றபோது, அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் அடைந்தார். 

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்