அச்சரப்பாக்கத்தில்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

அச்சரப்பாக்கத்தில்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.;

Update:2022-02-01 17:20 IST
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அதன் எல்லையொட்டியப் பகுதிகளில் இரவு, பகலாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் இரண்டு பிரிவுகளாக ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சரவணன் உள்ளிட்ட போலீசாரும், செய்யூர் தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்