உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க அதை பின்தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மேனுவல்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சா.செல்வகுமார், இணை சுகாதாரப்பணிகள் இயக்குனர் ஜீவா, துணை தொழுநோய் இயக்குனர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.