24 மணி நேர கண்காணிப்பில் 7 தேர்தல் பறக்கும் படைகள் அமைப்பு; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் வகையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.;

Update:2022-02-01 20:13 IST
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 156 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 384 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பதற்றமான 88 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் எனப்படும் இணையவழியில் கண்காணிக்கப்படும்.

மாவட்டத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் காஞ்சீபுரம் நகராட்சிக்கு 2 பறக்கும் படைகளும், மற்ற இடங்களுக்கு தலா ஒரு பறக்கும் படையும் என 7 பறக்கும்படை செயல்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் ஆகியனவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெறும்.

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை அருகே சிறுகளத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்