மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தம்

மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தம்;

Update:2022-02-01 21:00 IST
மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தம்
வால்பாறை

வால்பாறை பகுதியில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அடிப்படை அணைக்கட்டுகளாக  சோலையாறு அணை, மேல்நீரார்அணை, கீழ் நீரார்அணை ஆகிய அணைக்கட்டுகள் உள்ளன. இந்த அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தமிழக,கேரள நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி பல்வேறு காலகட்டங்களில் கேரளாவிற்கு திறக்கப்பட்டு வருகிறது.

இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சோலையாறு அணையிலிருந்து சோலையாறு மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பின்னர் தண்ணீர் கேரளாவிற்கு திறக்கப்படுகிறது.

அதேபோல் மற்றொரு ஒப்பந்தப்படி அக்டோபர் மாதம் 1-ந் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை மேல் நீரார்அணைக்கு வரக்கூடிய தண்ணீர் முழுவதையும் கேரளாவில் உள்ள வனப்பகுதியின் செழிப்பு மற்றும் வனவிலங்குகள் தேவைக்காக திறக்கப்பட்ட வேண்டும். 

அதன்படி வால்பாறை பொதுப்பணித்துறையின் நீர்ஆதாரத்துறை உதவிப்பொறியாளர்கள் மற்றும் கேரள பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு வந்த தண்ணீர், கால அவகாசம் முடிந்ததை முன்னிட்டு நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்