காயத்துடன் அவதிப்பட்ட பறவை மீட்பு

காயத்துடன் அவதிப்பட்ட பறவை மீட்பு;

Update:2022-02-01 22:59 IST
கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அடிபட்டு கால்கள் செயல் இழந்து எறும்புகள் சூழ்ந்த நிலையில் ஒரு பறவை கிடந்தது. இது குறித்து தகவலறிந்த விலங்குகள் மீட்பு குழுவை சேர்ந்த தன்னார்வலர் விவேக் என்பவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். 

பின்னர் அந்த பறவை கோவை வனத்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் பறவை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டது. அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து விவேக் கூறும்போது, மீட்கப்பட்ட பறவை வெள்ளை அரிவாள் மூக்கன் அல்லது கருந்தலை அரிவாள் மூக்கன் ஆகும். மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. குணமடைந்ததும் வாலாங்குளக்கரையில் விடப்படும் என்றார்.  

மேலும் செய்திகள்