ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல்

ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல்;

Update:2022-02-02 20:57 IST
ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல்
கோவை

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற19-ந் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 26-ந் தேதி மாலை முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு வழங்குவதை தடுக்க கோவையில் மண்டலம் தோறும் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

அதன்படி ஒரு பறக்கும் படையில் உதவி செயற்பொறியாளர், 2 போலீசார், வீடியோகிராபர் என 4 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


இந்த பறக்கும் படை அதிகாரிகள் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காளப்பட்டி ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுமதி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது அந்த வழியாக சிவகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார். அந்த காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் நேற்று மதியம் செல்வபுரம் பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அதனை கோவை கண்ணப்பநகரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் கொண்டுவந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்