விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு

விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு;

Update:2022-02-02 21:24 IST
விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு
கோவை

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கிராமப்புறங்களில் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது.

இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 8 வருடங்களாக விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு தரப்படவில்லை.இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பல்லடம் ரகங்களுக்கு 20 சதவீதமும், சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதமும் கூலி உயர்வு தர வாய்மொழி ஒப்பந்தம் இடப்பட்டது. 

ஆனால் அந்த ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப் படாததால் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி வீதம் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.  இதனால் இதுவரை ரூ.1500 கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கி இருப்பதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தது.

இந்தநிலையில் நேற்று கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் 25-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது 10 முதல் 12 சதவீதம் மட்டுமே கூலி உயர்வு அளிக்க முடியும் என்று ஜவுளித்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் 20 சதவீதத்துக்கு குறையாமல் வாங்க முடியாது என்று விசைத்தறி உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.  இதனால் பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், விசைத்தறிகளை இயக்கப் போவதில்லை என்றும், போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.
 

மேலும் செய்திகள்