பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.;

Update:2022-02-02 22:44 IST
பொள்ளாச்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. 

இந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

கோட்டூர் பேரூராட்சி பகுதியில் பொள்ளாச்சி தாலுகா தேர்தல் பிரிவு தனி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

பணம், பரிசு பொருட்கள்

பொள்ளாச்சி நகராட்சியில் 3 பறக்கும் படைகளும், பேரூராட்சி பகுதிகளில் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

 ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். மேலும் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றாலும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள்.

பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் திரும்பி ஒப்படைக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தேர்தல் நேர்மையான முறையில் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்