பொள்ளாச்சி நகராட்சியில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி தாணுமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி தாணுமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. இங்கு ஆண் வாக்காளர்கள் 39,220 பேரும், பெண்கள் 42,167 பேரும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் சேர்த்து மொத்தம் 81 ஆயிரத்து 418 பேர் உள்ளனர். இந்த வார்டுகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 89 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் வாக்குச்சாவடிகளில் எண், ஆண், பெண் வாக்காளர்கள் குறித்த விவரம் எழுதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி தாணுமூர்த்தி வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் வாக்குச்சாவடி களில் கழிப்பிட வசதி, சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் உள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகள்
பொள்ளாச்சி நகராட்சியில் 89 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி 49 பதற்ற மான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதை தவிர வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வுதளம், கழிப்பிட வசதிகள் அமைக்கப் பட்டு உள்ளன.
தற்போது வாக்குச்சாவடிகளில் எண் எழுதும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.