வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு;

Update:2022-02-03 22:49 IST
வால்பாறை

வால்பாறை நகராட்சியில் உள்ள வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

 இந்த பறக்கும்படையை சேர்ந்த அதிகாரிகள் வால்பாறை மற்றம் அதைசுற்றி உள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வாகனங்களில் செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என்றனர். 

இதற்கிடையே, இங்குள்ள 73 வாக்குச்சாவடிகளில் சிறப்பாக தேர்தல் நடத்த 10 மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

அவர்களுக்கு தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் வெங்கடாசலம், செல்வராஜ் முன்னிலையில்  ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வாக்களிக்க வரும் வாக்காளர் களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்