சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் வெளியீடு
சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் வெளியீடு;
கோவை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும்.
இந்தநிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கான சுயேச்சை சின்னங்களின் மாதிரிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில் 30 சின்னங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த சின்னங்களின் மாதிரிகளை வேட்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளன.
அதில் கிதார் (இசைக்கருவி), பேட்ஜ் (அடையாளக்குறி), ஸ்பேனர் (மறை திருக்கி), வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, நாற்காலி, புட்டி பாட்டில், மக்கு (நீர்க்குவளை), ரோடு ரோலர், பூப்பந்து மட்டை, திருகு ஆணி, மேற்சட்டை (கோட்), கோப்புகள் அடுக்கும் அலமாரி, முள் கரண்டி (ஸ்போர்க் ஸ்பூன்), ஆக்கி மட்டையும் பந்தும், மேசை விளக்கு, கைப்பை, தீப்பட்டி, டை, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம், அரிக்கன் விளக்கு, கரண்டி, தண்ணீர் குழாய், வாக்கிங் ஸ்டிக் உள்பட 30 சின்னங்கள் இடம்பெற்று உள்ளன.
வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடும்போது சுயேச்சை வேட்பாளர்களுக்கு இவற்றில் இருந்து சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.