ஏடிஎம் மையங்களில் பேட்டரிகள் திருடியவர் கைது

ஏடிஎம் மையங்களில் பேட்டரிகள் திருடியவர் கைது;

Update:2022-02-03 23:25 IST
கோவை

கோவையில் சிங்காநல்லூர், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட ஏ.டி.எம். மையங்களில் பேட்டரிகள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரே நாளில் வெரைட்டிஹால், சிங்காநல்லூர் பகுதியில் பேட்டரி திருட்டு போனது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். 

இதில் அவர் கோவை பாப்பநாயகன்பாளையத் தை சேர்ந்த செந்தில்குமார் (வயது41) என்பதும், அவர் ஏ.டி.எம். மையங்களில் மெக்கானிக் என்று கூறி பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது. 

இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து 14 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், இரவில் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று கருதி செந்தில்குமார் பட்டப்பகலில் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பேட்டரிகளை திருடி உள்ளார். 

யாராவது கேட்டால் மெக்கானிக் என்று கூறி நம்ப வைத்து உள்ளார். பின்னர் திருடிய பேட்டரிகளை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்