திருவல்லிக்கேணியில் கழிவுநீர் அகற்றும் குழாய் வெடித்து 2 பேர் படுகாயம்

திருவல்லிக்கேணியில் கழிவுநீர் அகற்றும் குழாய் வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-02-04 14:53 IST
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று மாலை பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் கழிவுநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் இருக்கும் குழாய் ஒன்று திடீரென வெடித்தது. 

இதில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் தினக்கூலியாக வேலைப்பார்த்து வரும் ஜானகிராமன் (வயது 40) மற்றும் கோபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்