நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 436 பேர் வேட்புமனு தாக்கல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 436 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.;
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி் தேர்தலையொட்டி நேற்று காஞ்சீபுரம் மாநகராட்சியில் 147 பேர், குன்றத்தூர் நகராட்சியில் 96 பேர்், மாங்காடு நகராட்சியில் 58 பேர், வாலாஜாபாத் பேரூராட்சியில் 57 பேர், உத்திரமேரூர் பேரூராட்சியில் 28 பேர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 50 பேர் என மொத்தம் 436 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் என மொத்தம் 156 வார்டு பதவிகளுக்கு இன்று வரை மொத்தம் 550 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.