செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க டிராக்டர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க புதிதாக நன்கொடையாளர் மூலம் வாங்கப்பட்ட டிராக்டர்கள் இயக்க தொடக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நடைபெற்றது.;

Update:2022-02-04 18:10 IST
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலுள்ள வேங்கடமங்கலம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு வீடாக நேரில் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க புதிதாக நன்கொடையாளர் மூலம் வாங்கப்பட்ட டிராக்டர்கள் இயக்க தொடக்க விழா வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் கஜா என்கிற கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், வெங்கட்ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன் கலந்துகொண்டு வீடுவீடாக டிராக்டர் மூலம் குப்பை சேகரிக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.ரவி, ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் லீமா ரோஸ்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்