ரூ.3 லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது

ரூ.3 லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது;

Update:2022-02-04 20:59 IST
ரூ.3 லட்சம் கையாடல் செய்த காசாளர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஒரு தனியார் இருசக்கர ஷோரூம் உள்ளது. இங்கு  சேரன் நகர் பகுதியை சேர்ந்த இந்திரன் (வயது 30) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஷோரூமில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ.3 லட்சத்தை இந்திரன் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் உரிமையாளர் பிரபு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் இந்திரனை தேடி வந்தனர். இதற்கிடையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேரன் நகரில் வைத்து இந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஷோரூமில் வரவு, செலவு கணக்கு விவரங்களை இந்திரன் கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சத்தை, வங்கியில் செலுத்தவில்லை. இதற்கிடையில் பணம் செலுத்தியது போன்று வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்து உள்ளார்.

 இந்த நிலையில் கணக்கு தணிக்கை செய்த போது வங்கியில் ரூ.3 லட்சம் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்