நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3 பேர் வேட்புமனு தள்ளுபடி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3 பேர் வேட்புமனு தள்ளுபடி;
பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 28-ந்தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும்.
இதற்கிடையில் நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடுவதற்கு 192 வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் 9 வார்டுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தனர். அப்போது ஒலிப்பெருக்கி மூலம் வார்டு, வாரியாக வேட்பாளர்களை அழைத்து பரிசீலனை செய்யப்பட்டது.
எந்தவித ஆட்சபணையும் தெரிவிக்காத வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் 3 வேட்பாளர்கள் 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் ஒரு மனு வீதம் தலா 3 வேட்புமனு தள்ளுப்படி ஆனது. இதற்கிடையில் வார்டு வரையறை செய்ததில் 31, 34 ஆகிய வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இது தெரியாமல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 31-வது வார்டுக்கு கார்த்திக், 34-வது வார்டுக்கு ரமேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 2 பேரின் வேட்புமனுக்களையும் அதிகாரிகள் தள்ளுப்படி செய்தனர். பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 5 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுப்படி ஆனது. 187 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வால்பாறை நகராட்சி வார்டு தேர்தலுக்கு அ.தி.மு.க. சார்பில் 21 பேரும், தி.மு.க.சார்பில் 25 பேரும், காங்கிரஸ் சார்பில் 9 பேரும், இந்தியகம்யூனிஸ்டு சார்பில் 2 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சார்பில் ஒருவரும், பா.ஜனதா சார்பில் 13 பேரும், விடுதலை கட்சி சார்பில் ஒருவரும், தே.மு.தி.க. சார்பில் ஒருவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் 11 பேரும், மக்கள் நீதிமையம் சார்பில் ஒருவரும், சுயேட்சையாக 25 பேரும் என 110 பேர் வேட்மனு தாக்கல் செய்தனர்.
தாக்கல் செய்திருந்த மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலும்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் 19- வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பென்னி என்ற திருநங்கையின் மனு இட ஒதுக்கீட்டுக்கு மாறாக இருந்ததாலும், இதே வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்திருந்த ரஞ்சித் என்பவருக்கு முன்மொழிந்தவர் அதே வார்டை சேர்ந்தவராக இல்லாததாலும், 9 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த முருகேஷ் பாகம் எண்,வரிசை எண் குறிப்பிடப்படவில்லை என்பதாலும், 10-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த சத்தியபாமா படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதாலும் மொத்தத்தில் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடியானதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.மீதியுள்ள 106 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் 15 பேரும், தி.மு.க. சார்பில் 15 பேரும், பா.ஜனதா 4 பேரும், சுயேட்சைகள் 18 பேரும் சேர்த்து மொத்தம் 52 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 52 பேரின் வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் தாக்கல் செய்த 82 பேரின் வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நெகமத்தில் 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அ.தி.மு.க. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆனது. 42 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கிணத்துக்கடவு பேரூராட்சியில் தாக்கல் செய்த 50 பேரின் வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுபோல் ஆனைமலை தாலுகாவில் உள்ள 5 பேரூராட்சிகளில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 419 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
---
Image1 File Name : 8860101.jpg
----
Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI