கோவை
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் 5 வயது சிறுமி, தந்தை இறந்ததாலும், தாய் எங்கோ சென்றுவிட்டதாலும் பாட்டியின் பராமரிப்பில் இருந்தாள்.
அந்த சிறுமிக்கு சுரேஷ் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி, பாட்டியிடம் கூறி அழுதது. சிறுமியின் பாட்டி கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா தேவி இதுகுறித்து விசாரணை நடத்தினார். சுரேஷ் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.