நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; காஞ்சீபுரம் மாவட்டத்தில் 988 பேர் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தி்ல் 988 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.;

Update:2022-02-07 18:38 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் போன்றவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நிறைவு பெற்றது.

மொத்தம் 156 பதவிகளுக்கு 1,001 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை அந்தந்த அலுவலகங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

988 மனுக்கள் ஏற்பு

இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. காஞ்சீபுரம் மாநகராட்சியில் 2 மனுக்களும், மாங்காடு நகராட்சியில் 5 மனுக்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 5 மனுக்களும், வாலாஜாபாத் பேரூராட்சியில் ஒரு மனு என மொத்தம் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 988 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்